என்னால் நம்ப முடியவில்லை.. அஜித் ரசிகர்களுக்கு நன்றி.. வைரலாகும் பரத்வாஜ் டுவிட் by priya | @ | March 7, 2023 9:51 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். இயக்குனர் சரண் இயக்கியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன் திரைப்படம் ஒரு மையில் கல்லாக அமைந்தது. இதனை தொடர்ந்து சரணின் பல படங்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். அதன்பின்னர் சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் வெளியான அமர்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தவிர்க்க முடியாத கூட்டணியாக மாறியது.இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை இசையமைப்பாளர் பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதில், 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்குமாருக்கு எனது முதல் படம். மேலும் A (அஜித்) – B (பரத்வாஜ்) – C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்.. கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…