பாலிவுட்டின் அடுத்த மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார்? – ஷாருக்கான் ருசிகர பதில்

இந்தி திரைத்துறையின் முதன்மையான நடிகர் ஷாருக்கான். இவர் சமீபத்தில் நடித்த பதான் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. இந்த திரைப்படம் 1,000 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது ரசிகர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என டுவிட்டரில் தெரிவித்தார். ஆஸ்க்எஸ்ஆர்கே (#AskSRK) என்ற ஹேஸ்டேக் மூலம் பல ரசிகர்கள் ஷாருக்கானிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு ஷாருக்கான் டுவிட்டரில் பதில் அளித்தார். அதில், உங்கள் ஓய்வுக்கு பின் பாலிவுட்டின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் யார்? என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான், சினிமாவில் நடிப்பதில் இருந்து நான் ஒருபோதும் ஓய்வுபெறப்போவதில்லை. என்னை வேலையை விட்டு தூக்கவேண்டும். அப்படி செய்தாலும் நான் மிகவும் சூடானவனாக மீண்டும் வருவேன்’ என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!