மீண்டும் அஜித்திற்கு வில்லனாகும் அருண் விஜய்?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ‘தடம்’, ‘மீகாமன்’, ‘கலகத்தலைவன்’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது.

இந்நிலையில், ஏகே62 படம் குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதன்படி, ஏகே62 படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2015-ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!