சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படம் இப்படி தான் இருக்குமாம்..? வெளியான சுவாரஸ்ய தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 9ஆம் தேதி அணைத்து தியேட்டர்களில் வெளியாகவுள்ளதை நாம் அறிவோம்.

இப்படத்தை தொடர்ந்து சிவாகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று தான் டான்.

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சூரி, குக் வித் கோமாளி சிவாங்கி, மிர்ச்சி விஜய், கெஸ்ட் ரோலில் இயக்குனர் கௌதம் மேனன் என பலரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படம் எந்த ஒரு ஹீரோயிசம் காட்சிகள் இல்லாமல், ஒரு Feel Good படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தை பார்க்கும் பொழுது கண்டிப்பாக நம்முடைய கல்லூரி நினைவுகள், நம் நினைவுக்கு வரும் என்றும் மிகவும் நகைச்சுவையாகவும், எமோஷனல் ஆகவும் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!