விருதுகளுக்கு தயாராகுங்கள்.. பிரபல இசையமைப்பாளரை வாழ்த்திய தமன்

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வாத்தி’. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் ‘சார்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் நாளை (பிப்ரவரி 17-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரின்ஸ், வாரிசு உள்ளிட்ட பல படங்களின் இசையமைப்பாளரான தமன், வாத்தி படத்தின் பாடல்களுக்காக ஜிவிபிரகாஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், விருதுகளுக்கு தயாராகுங்கள் அன்பு சகோதரர் ஜிவி பிரகாஷ். வாத்தி மற்றும் சார் படத்திற்கு முன்கூட்டியே வாழ்த்துகள். அடுத்த முறை உங்களுடன் இணைய முயற்சி செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!