விமர்சனம் செய்பவர்களை குற்றவாளியாக்குவது பாசிசத்தின் அடையாளம் -இயக்குனர் வெற்றிமாறன்

திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் தற்போது நடிகர் சூரி நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இவர் பல்வேறு கலை மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, “ஒரு விமர்சனம் வரும்பொழுது அதை ஏற்றுக்கொள்வது என்பது ஜனநாயக போக்கு. ஜனநாயக அமைப்பு. அதை எதிர்ப்பது அல்லது நமக்கு எதிரான விமர்சனமே வரக்கூடாது என்பதும் எந்த ரூபத்தில் விமர்சனம் வந்தாலும் அதனை ஒடுக்குவதும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறவர்களை குற்றவாளிகளாக்குவது, அந்த விமர்சனத்தை முன் வைப்பவர்களை தேச விரோதிகளாக்குவது என்பது பாசிசத்தின் அடையாளங்கள். இந்த ஆவணப்படத்தை பார்ப்பது என்பது பாசிசத்திற்கு எதிரான செயலாகத்தான் பார்க்கிறேன். இதனை பகிர்வதும் பாசிசத்திற்கு எதிரான செயல்பாடாக தான் பார்க்கிறேன். இந்த ஆவணப்படத்தை தமிழில் கொடுத்ததற்கு விசிகவிற்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!