‘வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ? – படக்குழு அறிவிப்பு

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 4ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிதுள்ளது . இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!