4 படங்களில் நயன்தாரா by priya | @ | February 1, 2023 8:52 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நயன்தாரா, ஜெயம் ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 புதிய படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் காட் பாதர் ஆகிய 5 படங்கள் வந்தன. ஓ2, கனெக்ட் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. தற்போது ஜெயம் ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் 2 புதிய படங்களில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், அதில் ஒரு படத்தை மித்ரன் ஜவகரும், இன்னொரு படத்தை மோகன் ராஜாவும் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கிய ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் ஜோடியாக ஏற்கனவே நயன்தாரா நடித்து இருந்தார். மோகன்ராஜா இயக்கும் படம் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதன் முதல் பாகத்தில் ஜெயம் ரவியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்து இருந்தனர். இப்போது இரண்டாம் பாகத்திலும் இணைகிறார்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…