ரசிகரின் செல்போனை தூக்கி வீசிய ரன்பீர் கபூர்.. ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்..

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. மேலும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் ரசிகர் ஒருவரின் செல்போனை வாங்கி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

அதாவது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க நடிகர் ரன்பீர் கபூர் சிரித்து கொண்டே போஸ் கொடுத்தார். ஆனால், அந்த ரசிகர் சரியான செல்ஃபியை எடுக்காததால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் செல்ஃபி எடுக்கமுடியவில்லை. இதனால் கடுப்பான ரன்பீர் கபூர், அந்த ரசிகரின் செல்போனை தூக்கி வீசுகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ விளம்பரத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் #angryranbirkapoor என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!