உங்களுடன் நடிக்க ஆசை என விருப்பத்தை தெரிவித்த திருநங்கை- விஜய் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் தர்மதுரை.

இதில் முக்கிய வேடத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றவர் திருநங்கை ஜீவா. இவர் தனது சினிமா பயணம் குறித்தும், அடுத்தடுத்த பட விஷயங்கள் குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் பேசும்போது, சர்கார் பட சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களிடம் படத்தில் எனக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா என கேட்டுக் கொண்டே இருந்தேன்.

அந்த நேரத்தில் தான் விஜய் அவர்களை சந்தித்தேன், தர்மதுரை படத்தில் நான் நடித்ததை நியாபகம் வைத்துக் கொண்டு நீங்கள் தானே அவர் படத்தில் நடித்தீர்கள் என்று கேட்டார். எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது, உடனே நான் உங்களுடன் நடிக்கனும் என்று கூறினேன்.

விஜய் அவர்களும் ஐயம் வெயிட்டிங் மா என சொன்னார், எனக்கு செம குஷியாகிவிட்டது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!