7 மொழிகளில் வெளியாகும் ‘ஆர் யா பார்’ இணையத்தொடர்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் அடுத்த ஒரிஜினல் வெளியீடான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் பிரிவில் ‘ஆர் யா பார்’ தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்டுள்ளது. ஒரு சாதாரண மனிதன் பின்தங்கிய நிலையில் உள்ள தன் பழங்குடியினரைக் காப்பாற்றி நவீன உலகில் வாழ முயலும் கதையாக இந்த தொடர் உருவாகியுள்ளது. ஆக்‌ஷன்- கலந்த இந்த டிராமா தொடரை எட்ஜ்ஸ்டார்ம் வென்ச்சர்ஸ் எல்எல்பி சார்பில் ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரித்துள்ளனர். க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடர் டிசம்பர் 30, 2022 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதில் சர்ஜு கதாப்பாத்திரத்தில் ஆதித்யா ராவல் நடித்துள்ளார். இந்த அதிரடி ஆக்சன் டிராமா தொடரை ஆதித்யா ராவல், பத்ரலேகா, சுமீத் வியாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, திப்யேந்து பட்டாச்சார்யா, ஆசிப் ஷேக், ஷில்பா சுக்லா, வருண் பகத், நகுல் சேதேவ் மற்றும் பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இத்தொடரின் நடிகர் ஆதித்யா ராவல் கூறுகையில், சர்ஜு எனும் அழகான பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். சர்ஜு தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க விரும்புகிறார், மேலும் தனது இலக்கை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். ஒன்றின் பின் ஒன்றாக பல சவால்களை சமாளிக்கும் போது இக்கதாபாத்திரத்தின் வெவ்வேறு சாயல்களை நீங்கள் காணலாம். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான “ஆர் யா பார்” தொடரில் சர்ஜுவாக நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சித்தார்த் சென்குப்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு நன்றி என்றார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!