நயன்தாராவுடன் படம் பார்க்க வந்த என்னை விரட்டிவிட்டனர்- ஜி.பி.முத்து வேதனை

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

‘கனெக்ட்’ படத்தின் சிறப்பு காட்சி வெளியீடு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வினய், ஜி.பி.முத்து மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட ஜி.பி.முத்து நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறியதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது, நிகழ்ச்சி நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடம் படம் பார்க்க விரும்புவதாக கூறி அழைத்தனர்.

ஆனால் என்னை எங்கோ ஒரு ஓரத்தில் அமரவைத்துவிட்டனர். அதோடு அங்கிருந்த பவுன்சர்கள் என்னை தரக்குறைவாக நடத்தினர். தூரப்போ என்று விரட்டினர். அது எனக்கு சங்கடமாக இருந்தது எனவே தான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அதன் பிறகு விக்னேஷ் சிவன் என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசினார். நான் அங்கிருந்து கிளம்பி வெகுதூரம் வந்துவிட்டதால் அடுத்த முறை சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!