தளபதியின் அந்த செயலால் தான் மெர்சல் வெளியானது!!!


தேனான்டாள் நிறுவன தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியையொட்டி வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் தமிழக பாஜக தலைவர்களை கோபப்படுத்தின.


பாஜக தலைவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுகிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர்.


படம் குறித்து சில சர்ச்சைகள் கிளம்பினாலும் நல்ல வசூலையே தொடர்ந்து குவித்து வருகிறது.

இந்தநிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மெர்சல் கலெக்ஷன் அப்படத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கு நிம்மதி சுவாசத்தை தந்திருக்கும்.

ஆனால் ரீலீசுக்கு முதல் நாள் அவருக்கு வந்த மூச்சுத்திணறல், பணத்தின் காரணமாக அமைந்ததுதான்.


படத்தை வெளியிட சுமார் 40 கோடி இருந்தால்தான் முடியும் என்ற நிலையில், தனது சொந்த வீட்டையே 15 கோடிக்கு அடமானம் வைக்க வேண்டிய நிலை.

நாலாபுறமும் பணம் புரட்ட அலைந்தவரின் சிரமத்தை உணர்ந்த விஜய், தானே முன் வந்து ஐந்து கோடி ரூபாய் பணம் கொடுத்தாராம். இது அவர் வாங்கிய சம்பளத்தின் ஒரு பகுதிதான் என்றாலும், இக்கட்டான நேரத்தில் கொடுக்க மனசு வேண்டுமே?

இவர் மட்டுமல்லஞ் டைரக்டர் அட்லீ கூட தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை விட்டுத்தந்தாராம். இந்தப்படத்தின் மித மிஞ்சிய கலெக்ஷன் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வைத்தாலும், காலத்தே செய்த உதவிக்கு கைமாறுதான் என்ன?

அதுக்குப் பிறகுதான் தடையின்றி படம் ரிலீஸானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!