யசோதா – விமர்சனம்

எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் சமந்தா. இவர் தனது தங்கையின் ஆப்ரேஷன் செலவுக்கு பணம் தேவை படுவதால் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுக்க முடிவு செய்கிறார். 3 மாதம் ஆன நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லபடுகிறார்.   அங்கு சமந்தாவை போல பலர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருக்கிறார்கள். மற்ற பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையில் இறந்து விடுகிறார்கள். இதை கண்டு பயப்படும் சமந்தா, பெண்கள் இறப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்கிறார்.   இறுதியில் அந்த மருத்துவமனையில் இருக்கும் மர்மம் என்ன? பெண்கள் இறக்க காரணம் என்ன? உண்மையை சமந்தா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.  

படத்தில் யசோதா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சமந்தா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாசம், தங்கை சென்டிமென்ட், ஆக்சன் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார்.   ஸ்டைலிஷ் வில்லியாக கலக்கி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். பல மாஸ் ஹீரோக்கள் நடிக்க வேண்டிய கதையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் சமந்தா.   உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், சம்பத் ராஜ் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.  

வாடகைதாய் கதையை வைத்து கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள். இரண்டு விதமாக திரைக்கதை நகர்த்தி சரியான இடத்தில் ஒன்று சேர்த்து இருக்கிறார்கள். VFX – யில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.   மணிஷர்மாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அதே போல், சுகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் யசோதா பூரிப்பு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!