மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா – இயக்குனர் ரத்ன குமார் நெகிழ்ச்சி

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் அண்மையில் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

‘விக்ரம்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது. இந்நிலையில், ‘விக்ரம்’ திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் விக்ரம் படக்குழு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் இயக்குனரும் விக்ரம் படத்தின் வசனகர்தாவுமான ரத்ன குமாருக்கு விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டதாவது, முதல் முறையாக எழுத்தாளராக. மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா. உங்கள் இதயத்திற்காக நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் ஐயா. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் என்று பதிவிட்டுள்ளார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!