உங்களை முழுதாய் படித்து முடிக்கவில்லை.. கமல்ஹாசனுக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம்,நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு! சொல்லிக் கொடுத்தேன். அள்ளிக்கொடுத்தார் அன்பை!” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!