வித்தியாசமான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியான போஸ்டர்..

இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து இவர் ‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு படக்குழு ‘ஃபர்ஹானா’ என தலைப்பு வைத்துள்ளது. மேலும் முஸ்லிம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!