வருமான வரித்துறைக்கு தெரிந்தால் உண்மை வெளிவரும் .. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனம் திறந்த சல்மான்கான்

தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இந்தியில் மட்டும் இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து 16-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சம்மதித்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதுதொடர்பாக 16-வது சீசன் அறிமுக விழாவில் நடிகர் சல்மான்கான் விளக்கமளித்துள்ளார். அதில், ” “நான் ஆயிரம் கோடி சம்பளம் வாங்கினால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாமே. இந்த அளவுக்கு சம்பளம் பெற்றால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகை செலவுகளும் அதிகமாகும்.

மேலும் இந்த செய்தி வருமான வரித்துறைக்கு கிடைக்கும். அவர்கள் வந்து சோதிக்கும் போது உண்மை வெளிவரும். இந்த 12 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!