ராணி எலிசபெத் புகழைக் காலம் சுமந்து செல்லும் – கவிஞர் வைரமுத்து ட்வீட்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணி எலிசபெத்தின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதையாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

எழுபது ஆண்டுகள்
அரசாண்ட முதல் அரசி
17 பிரதமர்கள் கண்ட
முதல் மகாராணி
ராஜ குடும்பத்தின்
முதல் பொறி நெறியாளர்
ராணுவப் பணி செய்த
முதல் அரண்மனைப் பெண்
அரசி எனில் தானே
என உலகை உணரவைத்த
முதல் ராணி
உங்களோடு கை குலுக்கியது
என் உள்ளங்கைப் பெருமை
உங்கள் புகழைக்
காலம் சுமந்து செல்லும்

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!