நடிகை சமந்தாவுடனான பயணம் முடிந்து விட்டது – பிரபல பாடகி

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் காஜல் அகர்வால், தமன்னா என பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

மேலும், நடிகை சமந்தாவுக்குத் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்தார். இதையடுத்து இனி சமந்தாவுக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர், ”தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!