‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!