இயக்குனர் அட்லீக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று ப்ளாக் பஸ்டர் வசூல் படத்தை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ.

மாநகரம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்து, கைதி எனும் ரூ. 100 கோடி வசூல் படம் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது மாஸ்டர் படத்தின் ரிலீஸிற்காக காத்துகொண்டு இருக்கிறார்.

இன்று முன்னணி இயக்குனராக வளம் வரும் அட்லீக்கு பிறந்தநாள் என்பதால் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அட்லீ பிறந்தநாளுக்காக காமென் டிபியை தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதில் ” ஹட் ட்ரிக் இயக்குனர் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!