பொன்னியின் செல்வனுடன் மோத தயாரான தனுஷ்.. தந்திரமாக முடிவெடுத்த செல்வராகவன்

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், 500 கோடியில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக தயாராகிறது. எனவே வரலாற்று திரைப்படமான இந்தப் படத்தின் மீது ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை தழுவி உருவாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியிருக்கும் தனுஷின் நானே வருவேன் திரைப்படம் பொன்னியின் செல்வன் வெளியாகும் அதே செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

தாணு தனுஷிடம், ‘பொன்னியின் செல்வன் ரிலீஸாகும் தினத்திலேயே நாமும் படத்தை ரிலீஸ் செய்யலாம்’ என்று சொல்லியிருக்கிறார். தம்பியிடம் தனுஷிடம் அண்ணன் செல்வராகவன் ‘தாணு சொல்வதைக் கேட்க வேண்டாம். அவருக்கு வசூல் வந்தால் போதும். ஆனால் நம்மைப் பொருத்தவரை படத்திற்கு நல்ல ரீச் இருக்க வேண்டும்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்துடன் சிறிய பட்ஜெட் படம் நிச்சயம் அடிவாங்கும். இதனால் நம்மளை தான் திட்டுவார்கள். ஆகையால் காத்திருந்து பொறுமையாக படத்தை ரிலீஸ் செய்யலாம். தாணு சொல்வதைக் கேட்க வேண்டாம்’ என முடிவை மாற்றிவிட சொல்லியிருக்கிறார்.

மேலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ் சினிமாவை உலக அளவில் பிரதிபலிக்கக் கூடிய பொன்னியின் செல்வன் படத்தின் உடன் நானே ஒருவன் படத்தை இறக்கி விடுவது சரியல்ல. ஏனென்றால் தமிழரின் வரலாற்றை எடுத்துரைக்கும் பொன்னின் செல்வன் படத்திற்கு குறுக்கிடாமல் அந்தப் படத்தின் வசூலுக்கு எந்த தடையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!