எஸ் ஜே சூர்யாவை அடையாளப்படுத்திய 2 படங்கள்.. இன்று வரை பேசப்படும் கதாபாத்திரங்கள்

ஒரு ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு ஏராளமான வில்லன் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அதனால் எஸ் ஜே சூர்யா தான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்து விட்டு முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். ஆனாலும் இவர் இயக்கிய சில திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அப்படி எஸ்.ஜே சூர்யாவை அடையாளப்படுத்திய இரண்டு திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

வாலி: எஸ் ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமான இந்த திரைப்படத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் அஜித் அண்ணன், தம்பி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதிலும் தம்பி மனைவியின் மீது ஆசைப்படும் அந்த அண்ணன் கேரக்டர் பலரின் பாராட்டையும் பெற்றது.

அஜித்திற்கு கொஞ்சமும் குறையாமல் சிம்ரனின் நடிப்பும் அபாரமாக இருக்கும். அந்த வகையில் எஸ் ஜே சூர்யா தன்னுடைய முதல் படத்திலேயே யார் இந்த இயக்குனர் என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தார். மேலும் காது மற்றும் வாய் பேச முடியாதவராக வில்லத்தனத்தில் கலக்கியிருந்த அஜித்தின் நடிப்பு இன்றுவரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

குஷி: வாலி திரைப்படத்தை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் இரண்டாவதாக வெளியான இந்த திரைப்படத்தில் விஜய், ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கல்லூரி கால வாழ்க்கையும், அதில் ஹீரோ, ஹீரோயினுக்கு இடையே ஏற்படும் ஈகோ, காதல், மோதல் போன்ற பல விஷயங்களையும் அவர் ரசனையோடு கொடுத்திருப்பார்.

அதிலும் விஜய் மற்றும் ஜோதிகா இருவருக்கும் இடையேயான பல காட்சிகள் ரசிகர்களை பெருமளவில் ரசிக்க வைத்தது. அந்த வகையில் விஜய்க்கு இந்த படம் ஒரு முக்கிய திருப்பு முனையையும் கொடுத்தது. இதன்மூலம் எஸ் ஜே சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களும் எஸ்.ஜே சூர்யாவின் வாழ்க்கையை திருப்பி போட்ட படங்களாகும். அந்த வகையில் இந்த படத்தில் விஜய், அஜித்தை தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது என்று அவர் பலமுறை பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!