கமலின் விக்ரம் படத்தில் நடந்த முக்கிய மாற்றம், யார் விலகியது தெரியுமா?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னரே தொடங்கவிருந்து, ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.

மேலும் விக்ரம் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் அறிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன் இப்படத்தில் சத்யன் சூரியன் பணியாற்றவிருந்த நிலையில் அவர் இப்படத்தில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக தற்போது கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!