இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ் திரையுலகில் ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் எண்ணி ஏழு நாள் என்ற படத்திற்காக பெற்ற கடனை இயக்குனர் லிங்குசாமி திரும்ப செலுத்தவில்லை என கூறி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக அவர் வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!