ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த மாஸ் ஹீரோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கேப்டன் விஜயகாந்த் ஒரு சூப்பர் ஹிட் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜயகாந்த் அட்வான்ஸ் முதற்கொண்டு வாங்கிய பின் அந்த படத்திலிருந்து சில தனிப்பட்ட காரணங்களால் விலகி இருக்கிறார்.

ரஜினி-கமல் உச்சத்திலிருந்த காலங்களில் விஜயகாந்த் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். 1979 ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்னும் திரைப்படத்தில் விஜயகாந்த் முதன்முதலில் நடித்தார். ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தாள்’ ‘நானே ராஜா நானே மந்திரி’ திரைப்படங்களின் மூலம் வெற்றி கண்ட விஜயகாந்திற்கு ஆர் கே செல்வமணியின் ‘கேப்டன் பிரபாகரன்’ என்னும் திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது.

80 களில் ரஜினிகாந்த் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். பில்லா, தர்ம யுத்தம், தில்லு முள்ளு, ஜானி, பொல்லாதவன், நெற்றிக்கண் வரிசையில் முரட்டுக்காளை என்னும் திரைப்படத்திலும் வெற்றி கண்டார். முரட்டுக்காளை ரஜினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான ஆக்சன் திரைப்படம்.

முரட்டுக்காளை இயக்குனர் SP முத்துராமன் இயக்கத்தில், AVM ப்ரொடக்சன் தயாரிப்பில் ரஜினி, ரதி அக்னிகோத்ரி, ஜெய் ஷங்கர், YG மகேந்திரன், சுருளிராஜன் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம்.

இந்த படத்தில் ஜெய் ஷங்கர் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் கதையை கேட்டு ஒகே சொல்லிவிட்டு 25,000 அட்வான்சும் வாங்கி வந்து விட்டாராம். பிறகு தன்னுடைய நண்பர் ராவுத்தருக்கு இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார். ராவுத்தரோ விஜயகாந்தை நாயகனாக நடிக்க வைக்கவே விருப்பப்பட்டதால் முரட்டுக்காளை திரைப்படத்தில் நடிக்க கூடாது எனக் கூறிவிட்டாராம்.

ராவுத்தர் சொன்னதும் விஜயகாந்த் வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்து விட்டாராம். விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் ராவுத்தரின் பங்களிப்பு அளப்பரியது. ஆரம்ப நாட்களில் விஜயகாந்த் படங்களை இவர்தான் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!