இடம் பொருள் ஆவி – சினிமா விமர்சனம்


பணக்கார வீட்டு பையனான திலக் சேகர் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தோல்வியடைகிறார். அவரது தங்கை அனிஷா ஆம்ப்ரூஸ். அனிஷாவின் பிறந்தநாளில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார் அவரது அப்பா. அந்த பார்ட்டியில் திலக்கின் நண்பர்களான ஆர்.ஜே.ரோஹத், அனு பூவம்மா, விஜய் செந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், திலக்கிடம் பணம் கேட்டு சிலர் பார்ட்டியில் ரகளை செய்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தன் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் திலக்கின் அப்பா அவர்களுக்கு பணம் தர மறுக்கிறார். இதையடுத்து தனது நண்பர்களின் உதவியுடன் தனது தங்கையான அனிஷா ஆம்ப்ரூஸை கடத்தி தனது தந்தையை மிரட்டி பணம் கேட்கிறார். அனிஷாவை ராஜா பங்களா என்று கூறப்படும் பேய் பங்களாவில் வைக்கின்றனர். அங்கு தன்னை கடத்தியவர்கள் தனது அண்ணனின் நண்பர்கள் தான் என்பது அனிஷாவுக்கு தெரிய வருகிறது.

அதேநேரத்தில் அந்த பங்களாவில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை ஆட்டிப் படைக்கிறது. கடைசியில், திலக் சேகருக்கு பணம் கிடைத்ததா?


அந்த பேய் பங்களாவில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

திலக் சேகர், ஆர்.ஜே.ரோஹித், அனிஷா ஆம்ப்ரூஸ், அனு பூவம்மா என படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்துமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். விஜய் செந்தர் அவ்வப்போது காமெடியில் கலக்கியிருக்கிறார்.

பணத்துக்காக கடத்தலில் ஈடுபடுபவர்கள், பேயிடம் சிக்கிக் கொண்டு மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை த்ரில்லுடன் கொடுத்திருக்கிறார் நவனீத். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சி.ஜே.மோகன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `இடம் பொருள் ஆவி’ திகில் குறைவு.Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!