தெலுங்கு கற்றுக் கொள்ளும் சிவகார்த்திகேயன்.. காரணம் இதுதானா?

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கான நுட்பங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!