செக்ஸ் வாழ்க்கை குறித்த கேள்வி.. அதிர்ச்சி அடைந்த விஜய் தேவரகொண்டா

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா லைகர் படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இந்த படத்தில் உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார். ஒரு டீக்கடை வியாபாரியாக இருந்து இந்திய பாக்ஸராக எம்எம்ஏ பட்டத்தை எப்படி வெல்கிறார் என்பதே இந்த படத்தின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த படம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா மிகவும் சாதரணமாக உடையணிந்து, சாத செருப்புகள் அணிந்து வருகை கொடுத்திருந்தார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


இந்நிலையில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரன் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோகரின், காபி வித் கரண் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சமந்தா, அக்‌ஷய் குமார் கலந்து கொண்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.


அந்த நிகழ்ச்சியின் புரோமோவில், கடைசியாக எப்போது உடலுறவு கொண்டீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கரண் கேட்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளிக்கும் விஜய் தேவரகொண்டா இது வேண்டாம் என பதிலளிக்கிறார். இறுதியில் கார் என்கிறார் நாயகன். அதற்கு காருக்குள் மூவருமா கேள்வி எழுப்புகிறார் கரண். இல்லை என மறுப்புரைக்கிறார் விஜய் தேவரகொண்டா. இந்த வீடியோ காபி வித் கரண் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது. ஆனால் விஜய் தேவாரகொண்டாவின் பர்சனல் லைப் குறித்த கரணின் கேள்வி நிச்சயம் சர்ச்சையை உண்டாக்கும் என கூறப்படுகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!