அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்: குக் வித் கோமாளியில் சொன்ன நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் குக் வித் கோமாளி ஷோவிற்கு வந்திருக்கிறார். அவரது இரவின் நிழல் படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் அவர்சென்றிருக்கிறார். உடன் நடிகை பிரிகிடாவும் வந்திருந்தார்.

ஷோவில் படத்தை பற்றி பார்த்திபன் சில விஷயங்களை பேசினார். ஒரு ஷாட்டில் மொத்த படத்தையும் non-linear ஆக எடுத்திருப்பதாக கூறினார்.


அப்போது பேசிய தொகுப்பாளர் ரக்ஷன் “அந்த படத்தில் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக கூட சான்ஸ் கிடைக்காதா என ஆடிஷனுக்கு சென்றேன், அப்படி ஒரு படம் அது” என ரக்ஷன் கூறினார்.

அதை கேட்ட பார்த்திபன், “நீங்கள் தற்போது தனியாக படம் பண்றீங்கனு கேள்விப்பட்டேன். அடுத்த சிவகார்த்திகேயன் நீங்க தான்” என கூறினார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!