இதுவரை அதிக தேசிய விருதுகளை கைபற்றிய தமிழ் திரைப்படங்கள் ! என்னென்ன தெரியுமா?

இந்திய திரையுலகில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசிய விருது, வருடம்தோறும் தேசிய விருதை பேரும் திரைப்படங்களின் மீது இந்தியளவில் பேசப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 68-வது தேசிய விருது குறித்த பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு மொத்தமாக 10 விருதுகள் கிடைத்துள்ளது.

மேலும் நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் இதேபோல் அதிக தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.  

கன்னத்தில் முத்தமிட்டால் (2002) – 6 தேசிய விருதுகள்
சிறந்த திரைப்படம் – மணிரத்னம்
சிறந்த இசையமைப்பாளர் – ஏ. ஆர். ரகுமான்
சிறந்த பாடலாசிரியர் – வைரமுத்து
சிறந்த குழந்தை நட்சத்திரம் – கீர்த்தனா
சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்,  H. ஸ்ரீதர்

அடுகளம் (2010) – 5 தேசிய விருதுகள் 
சிறந்த நடிகர் – தனுஷ்
சிறந்த இயக்கம் – வெற்றிமாறன்
சிறந்த நடன இயக்கம் – தினேஷ் குமார்
Special Jury விருது – ஜெயபாலன்
சிறந்த திரைக்கதை – வெற்றிமாறன்  

சூரரை போற்று (2020) – 5 தேசிய விருதுகள் 
சிறந்த நடிகர் – சூர்யா
சிறந்த நடிகை – அபர்ணா பாலாமுரளி
சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர்
சிறந்த பின்னணி இசை – G.V. பிரகாஷ் குமார்
சிறந்த திரைப்படம் – சூரரை போற்று  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!