விஜய் மற்றும் ஷங்கர் படத்தின் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா ! தயாரிப்பாளர் எடுத்துள்ள முடிவு..

வாரிசு – RC15
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் RC15 திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களையும் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

இதற்கிடையே தற்போது வாரிசு மற்றும் RC15 இந்த இரண்டு திரைப்படங்களின் ஒவர்சீஸ் ரைட்ஸையும் சேர்த்து தயாரிப்பாளர் ரூ. 65 கோடி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக ஒரு சில நிறுவனங்கள் முந்திக்கொண்டு அப்படங்களின் ரைட்ஸ்களை வாங்க முயற்சிப்பதாகவும், மேலும் 60 கோடிளவில் அப்படங்களின் ஒவர்சீஸ் ரைட்ஸ் விற்கப்படலாம் என சொல்லப்படுகிறது.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!