கமல் பாணியை பின்பற்றிய சிபி சத்யராஜ்.. நெகிழ்ந்த இயக்குனர்.. by priya | @ | June 30, 2022 9:41 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘மாயோன்’ திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில், ‘மாயோன்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிபி சத்யராஜ், மாயோன் திரைப்படத்தின் இயக்குனர் கிஷோருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யாவிற்கு சிறப்பு பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…