30 வருட கொண்டாட்டம்… ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனர் by priya | @ | June 27, 2022 9:38 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ரஜினிகாந்த் நடிப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 27 தேதி வெளியான திரைப்படம் ‘அண்ணாமலை’. இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு முதல்முறையாக தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் குறிப்பிடப்படும் படங்களில் ‘அண்ணாமலை’ திரைப்படம் இன்று வரை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் இப்படம் திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.இந்நிலையில் ‘அண்ணாமலை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் 30 வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…