RJ பாலாஜியின் கதைக்கு ஒகே சொன்ன தளபதி விஜய் ! யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி..

விஜய்க்கு RJ பாலாஜி சொன்ன கதை
தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அனைவரிடமும் பிரபலமானவர் RJ பாலாஜி.
இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவரே திரைப்படங்களை இயக்கி நடித்து வருகிறார். அப்படி படைப்பில் வெளியான LKG, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

அப்படங்களை சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீட்ல விஷேசம், ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்காக வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே அப்படத்தின் சக்சஸ் மீட் இன்று நடந்துள்ளது, அதில் RJ பாலாஜி சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். ஆம், கடந்த் ஜனவரி 27 ஆம் தேதி பாலாஜி நடிகர் விஜய்யை சந்தித்து அவரிடம் கதையை கூறியுள்ளாராம்.

2 மாதத்தில் அந்த கதையை எழுதி, ஒரு 40 நிமிட கதையை அவரிடம் கூறினராம் பாலாஜி. அந்த லைன் கேட்டு விஜய்க்கு பிடித்தி போனாதாகவும், “காமெடியாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் போல உங்க ஸ்டைலில் ஒரு கதையை எதிர்பார்த்தேன். ஆனால் இது ரொம்ப பெருசு-ஆ இருக்கே.

இந்த கதையை உருவாக்க இன்னும் எவ்வளவு டைம் ஆகும்” என விஜய் கேட்டுள்ளாராம். அதற்கு பாலாஜி இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்றதாகவும், உங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்த படமாக உருவாக்க இந்த ஒரு வருட காலம் கண்டிப்பாக தேவை என அவர் கூறினாராம். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!