தனுஷின் நானே வருவேன் படத்தை இப்போதே விமர்சனம் செய்த தயாரிப்பாளர் தாணு !

நானே வருவேன்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன். இப்படத்தை V கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய கூட்டணியாக பார்க்கப்படும் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் இதுவரை காதல் கொண்டன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் உருவாகி வருகிறது.

விரைவில் ரிலீஸாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தை இப்போதே அப்பட தயாரிப்பாளார் தாணு புகழ்ந்து தள்ளியுள்ளார். விருது வழங்கும் விழாவில் செல்வராகவனுக்கு விருது வழங்கிய தாணு அப்படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “இதற்கு முன் அவர் இயக்கிய திரைப்படங்களை விட நானே வருவேன் திரைப்படம் செல்வராகவனை பெரிய இடத்திற்கு கொண்டு போகும், இப்படம் அகிலமெங்கும் அவரை பெரிய அதிர்வலையை உண்டாகும்.

தனுஷ் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தி இருக்கிறார், இதுவரை யாரும் செய்திராத கதாபாத்திரமாக அவரின் ரோல் இருக்கும்” என அவர் பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!