அந்த கேள்வியை கேட்டாலே எரிச்சலா இருக்கு.. சூர்யா பட ஹீரோயின் காட்டம்

8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், சூரரைப் போற்று, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் அபர்ணா பாலமுரளி.

அவர் தற்போது உடல் எடை கூடி குண்டாகி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் அதை பற்றி பேசி இருக்கிறார்.
குண்டாகிவிட்டதாக ட்ரோல் செய்பவர்கள் அந்த நபர் எதனால் அப்படி ஆனார் என்ற உண்மையான காரணத்தை அறிந்துகொள்ளாமல் இப்படி பேசக்கூடாது என கூறி இருக்கிறார்.

மேலும் பேட்டிகளில் ‘எந்த நடிகருடன் நடிக்க ஆசை?’, எப்போது திருமணம்?’ போன்ற கேள்விகளை கேட்டாலே எரிச்சலாக இருக்கிறது என அபர்ணா தெரிவித்து இருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!