எல்யூசி என்பது மக்கள் கொடுத்தது: லோகேஷ் நெகிழ்ச்சி

ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் , முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.

ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்கள் ‘கைதி-2’ படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்பது மக்கள் கொடுத்தது என்று இயக்குனர் லோகேஷ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், “லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (எல்யூசி) என்ற பெயர் மக்கள் கொடுத்தது. இந்த பெயர் ஒரு புது வரவேற்பாக உள்ளது. அதனால், இனி வரும் காலங்களில் கைதி, விக்ரம் திரைப்படங்களின் தொடர்ச்சியாக வரும் படங்களில் எல்யூசி என்ற பெயர் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!