வலிமை படத்தின் ஒட்டுமொத்த காலெக்‌ஷனையும் முந்திய விக்ரம்! அஜித்தை பின்னுக்கு தள்ளிய கமல்..

வலிமை படத்தை முந்திய விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான திரைப்படம் விக்ரம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதிபதி, பகத் பாசில் என முவரும் இணைந்து கமலுடன் நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து இருந்தது.


அந்த எதிர்பார்பை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தை தாண்டி இப்படம் பல மாநிலங்களில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இதனிடையே பல வருடங்களுக்கு பிறகு கமலிடம் திரைப்படம் வெளியானாலும் முன்னணி நடிகர்கராக விளங்கும் அஜித்தின் திரைப்பட வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது விக்ரம்.

ஆம், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் ஒட்டுமொத்த சென்னை வசூலையும் முந்தியுள்ளது விக்ரம். இனி வரும் நாட்களில் பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் பட வசூலை விக்ரம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!