லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபல வில்லன் நடிகர்.. அவரே கூறிய விஷயம்

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்கமுடியாத இயக்குனராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் விக்ரம்.
விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது.

கேள்விக்கு பதிலளித்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் ஒருவர், உங்களுடைய படத்தில் மன்சூர் அலி கான் எப்போது நடிப்பார் என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ‘ விரைவில்’ என்று கூறியுள்ளார். இதற்குமுன் லோகேஷ் இயக்கிய கைதி படத்தில் கூட முதன் முதலில் நடிக்கவிருந்தது மன்சூர் அலி கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!