கவனம் ஈர்க்கும் கோவை சரளா- டிரெய்லர் வெளியிட்ட செல்வராகவன்

கோவை சரளா நடித்துள்ள படத்தின் டிரெய்லரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார்.

2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன்.  கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் ‘செம்பி’. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.  இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். சமீபத்தில் ‘செம்பி’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது

தற்போது, இதன் டிரெய்லரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே படத்தின் ரிலீஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!