இரண்டு பாகங்களாக உருவாகும் வெற்றிமாறனின் திரைப்படம்.. காத்திருக்கும் சர்ப்ரைஸ்

விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை படம் உருவாகி வருகிறது.

கதாநாயகனாக சூரி நடித்து வரும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியாகிறது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
அதன்படி, இப்படத்தின் நீளம் என்பதன் காரணமாக, விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

முதல் பாகம் வெளிவந்த அடுத்த மூன்று மாதத்தில் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!