தனுஷ் படமா, வேண்டவே வேண்டாம்.. தெறித்து ஓடும் வாரிசு நடிகை..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை தயாரிப்பாளரும், பைனான்ஷியருமான அன்புச்செழியன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் இளம் நடிகை ஜான்வி கபூர் அணுகியுள்ளனர். ஜான்வி கபூர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தனுஷ் படமா வேண்டவே வேண்டாம் என்று கூறியுள்ளாராம் ஜான்வி கபூர்.

இப்படம் மட்டுமின்றி இதற்குமுன் ஹிந்தியில் தனுஷின் நடிப்பில் வெளிவந்த அத்ராங்கி ரே படத்திலும், முதன் முதலில் சாரா அலி கானுக்கு பதில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது ஜான்வி கபூர் தானாம்.

அப்போதும், தனுஷ் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று ஜான்வி கபூர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏன் தனுஷ் படம் என்றால் எப்படி பயப்படுகிறார் என்று திரை வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!