பிக்பாஸ் பிரபலத்திடம் மோசமாக நடந்துகொண்ட ரசிகர்கள்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டதும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியை எதிர்க்கும் விதமாக அது நம் கலாச்சாரம் இல்லை என்றும் நிகழ்ச்சி நடக்கக்கூடாது என்றும் நிறைய பிரச்சனைகள் எல்லாம் நடந்தது.

ஆனால் அந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி ரசிகர்களிடம் இந்த நிகழ்ச்சியானது அமோக வரவேற்பு பெற்றது. தற்போது பாலிவுட்டில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் இறுதிக்கட்டத்திலுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் மூன்று போட்டியாளர்கள் உள்ளனர். இந்த மூன்று போட்டியாளர்களுக்கான வாக்குகளை ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட மாலுக்கு வந்து போட வேண்டும்.

அந்த வாக்கு பதிவு நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது வாக்களிப்பதற்காக பிக்பாஸ் பிரபலங்களும் வந்தனர்.

அந்த பகுதி முழுவதும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அப்போது அக்கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் நடிகை ஹினா கானின் முடியை இழுத்து செல்பி எடுக்க முயன்றிருக்கிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!