ஹிந்தி டப்பிங்கில் கலக்கிய சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

தமிழில் மட்டும் நாம் பார்த்து ரசித்த பல திரைப்படங்கள் தற்போது பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. குறிப்பாக ஹிந்தியில் டப் செய்யப்படும் தமிழ் திரைப்படங்கள் வடஇந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அப்படி, தமிழில் இருந்து ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து பார்க்கவிருக்கும் சிறப்பு பார்வை தான், இந்த கட்டுரை..

இரும்பு திரை
பிஸ்.எஸ். மித்ரனின் அறிமுக இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் இரும்பு திரை. இப்படத்தில் வில்லனாக நடித்து அசத்திரியிருந்தார் நடிகர் அர்ஜுன். மேலும் சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருத்தனர். தமிழில் வெற்றிபெற்ற இப்படம் ஹிந்தியில் The Return of Abhimanyu எனும் பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படம் Youtubeல் மட்டுமே சுமார் 170 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. வடஇந்திய ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தி டப் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

துப்பாக்கி
ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் முதல் முறையாக கூட்டணி அமைத்து வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. அளவான மாஸ், அற்புதமான கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்து விஜய்க்கு கம் பேக் கொடுத்தது. துப்பாக்கி என தமிழில் வெளிவந்த இப்படத்தை Captain Vijay என பெயர் மாற்றி ஹிந்தியில் டப் செய்துள்ளனர். Youtubeல் மட்டுமே Captain Vijay படத்தை சுமார் 133 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். தமிழில் எந்த அளவிற்கு இப்படம் வெற்றியடைந்ததோ, அதே அளவிற்கு ஹிந்தி டப்பிங்கிலும் வெற்றிபெறட்டுள்ளது.

விவேகம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விவேகம். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தினால் தோல்வியை தழுவியது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தமிழில் பின்னடைவை சந்தித்த இப்படம், ஹிந்தி டப்பிங்கில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. ஆம், Youtubeல் மட்டுமே இப்படம் 125 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோமாளி
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோமாளி. நகைச்சுவை கலந்த சமூக அக்கறையோடு உருவாகி வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை கொண்டாடினார்கள். இந்நிலையில், தமிழில் வெளிவந்த அதே தலைப்பில் ஹிந்தியில் டப் செய்து வெளியான இப்படத்தை, Youtubeல் 72 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

மாரி 2
பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாரி 2. இது முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் வெளிவந்த படமாகும். தனுஷின் மாசான நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தோல்வியை தழுவியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவிய இப்படம் ஹிந்தி டப்பிங்கில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. ஆம், ஹிந்தியில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் Youtubeல் மட்டுமே 159 மில்லியன் பார்வையாளர்களாக பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாரி 2 படம் வடஇந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜில்லா
கடந்த 2014ஆம் ஆண்டு ஆர்.டி. நேசன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜில்லா. அப்பா, மகன் செண்டிமெண்ட்டுடன் ஆக்ஷன் கலந்து வெளிவந்த இப்படம் ஆவெரேஜ் ரிசல்ட்டை மக்கள் மத்தியில் பெற்றது. தமிழில் ஜில்லா என தலைப்பில் வெளிவந்த இப்படம், ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு Policewala Gunda 2 எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு Youtubeல் 217 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதன்முலம் வடஇந்திய ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பினை Policewala Gunda 2 திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!