முன்னணி நடிகரின் தற்போதைய பரிதாப நிலை..!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் தான் விசு. சினிமாவை தண்டி தொலைகாட்சியில் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றார் விசு.

பல திரைபடங்களில் ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை அடையளப்படுத்திக்கொண்டிருக்கிறார் இவர். ஆனால், இவரது தற்போதையை நிலை மிகவும் மோசம். இவரது அடையாளமே இவருடைய குரல் தான். என்னடா கண்ணா..? என்று இவர் கூறும் தோணி இன்றளவும் இளவட்டங்களிடம் பிரசித்தம்.

இவருக்கு தற்போது வயது 72, தொண்டையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக இவரது குரல் சுத்தமாக மாறிப்போய்விட்டது. இதனால், பேசுவதற்கே மிகவும் சிரமப்படுகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும் மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர்.

இதனால், விசுவும் தனது மகள்களுடன் அமெரிக்காவிலேயே தங்கியுள்ளார். முதுமை காரணாமாகவும், பேசுவதற்கு சிரமப்படுவதன் காரணமாகவும் இனிமேல் சினிமாவில் விசு நடிக்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!