கமலின் விக்ரம் படத்தில் இந்த காட்சிக்காக மட்டும் இத்தனை கோடி செலவா!

கமலின் விக்ரம் 
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்துள்ளது தெரிந்த விஷயம்.

மேலும் ஏற்கனவே இப்படத்தின் கிளம்பிஸ், டீசர் உள்ளிட்டவை வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என்பதால் அப்படத்தின் ப்ரோமோஷன் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

புதிய தொழில்நுட்பம் 

இந்நிலையில் இப்படத்தில் கமலை இளமை தோற்றத்தில் காட்டியுள்ளதாகவும், இது பழைய கமலின் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது இப்படத்தில் கமலை முப்பது வயது நபராக மாற்றும் தொழில்நுட்பத்திற்கு படக்குழு பத்து கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் சமீபத்தில் மார்ட்டின் ஸ்கோர்செஸ் இயக்கத்தில் வெளியான தி ஐரீஷ்மென் படத்தில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!