பீஸ்ட்-யை விட KGF 2 படத்திற்கு ரசிகர்கள் ஆதரவளிப்பது குறித்து பேசிய உதயநிதி ?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.

இவர் நடிப்பில் நெஞ்சுக்கு நிதி திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ளது, மேலும் இவரின் ரெட் ஜெயண்ட் மோவிஸ் சர்பமாக தொடர்ந்து பல்வேறு படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள The Warrior படத்தின் லிரிக் பாடல் வெளியிட்டு விழா நடந்தது, இதில் உதயநிதி பங்குபெற்று பேசியிருந்தார்.  

மற்ற மொழி படங்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு
மேலும் அவர் பேசியபோது “தெலுங்கு படங்கள் தற்போது பான் இந்தியாவாக மாறியுள்ளது, தமிழ் படங்கள், தமிழ் மக்கள் ஓட வைக்கிறார்களோ இல்லையோ. நல்ல படங்களை எந்த மொழியாக இருந்தாலும் ஓட வைக்கிறார்கள்.

நான் தமிழ் படங்களை குறை சொல்லவில்லை, நல்ல படங்களை தமிழ் மக்கள் ஓட வைப்பார்கள்” என பேசியுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பீஸ்ட் படத்தை விட KGF 2 இங்கு நன்றாக ஓடுவது குறித்து தான் உதயநிதி பேசியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!