சென்னையின் முக்கிய இடத்தையே செட்டாக மாற்றிய AK 61 படக்குழு ! சுவாரஸ்யமான தகவல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் அடுத்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படம் வெற்றியடைந்துள்ளது.

அப்படத்தை தொடர்ந்து அஜித் AK 61 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு செட்டை ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்த மேலும் சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!